Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “ருத்ரன்”….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற ஹாரர் படங்கள் ரசிகர் களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்தது. இவர் தற்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ருத்ரன் திரைப்படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு கேபி திருமாறன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். ருத்ரன் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், நாசர் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆக்சன் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் ருத்ரன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் படகுழுவினர் மீண்டும் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி அடுத்த வருட ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ரசிகர்கள் படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதற்காக இவ்வளவு தாமதம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |