Categories
சினிமா

ராகவா லாரன்சுக்கு கிடைத்த அந்தஸ்து…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், டிரைக்டர் என்று பன்முகத் திறமை கொண்டவராக ராகவாலாரன்ஸ் திகழ்கிறார். இவர் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படத்தின் 3 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்போது ருத்ரன், அதிகாரம் மற்றும் சந்திரமுகி-2 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமூகசெயல்களில் ஈடுபாடுடன் உள்ள அவர், “லாரன்ஸ் அறக்கட்டளை” எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த அறக்கட்டளையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் உட்பட பல நலஉதவி திட்டங்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், ராகவா லாரன்ஸிற்கு சமூகசேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து இருக்கிறது. இது தொடர்பாக ராகவாலாரன்ஸ் சமூகவலைத்தளத்தில் நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார். அதில் “இந்த பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை ஆகும். இவ்விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் சார்பாக என் அம்மா இவ்விருதினை பெற்றது மிக சிறப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |