ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் யோசனையை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நாஜி கொள்கையுடன் ஒப்பிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் முடிவில்லாத போக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் ரஷ்ய குடிமக்கள் நுழைவதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாகவே லாட்வியா, பின்லாந்து மற்றும் எஸ் டோனியா போன்ற நாடுகள் ரஷ்ய குடிமக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வதாக அறிவித்துள்ளன.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பின்பற்றுமாறு வலியுறுத்தி இருக்கின்றது. இந்த சூழலில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற முதல் சர்வதேச பாசிச எதிர்ப்பு காங்கிரஸ் கூட்டத்தின் போது தேசிய ராசிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நுழைவதை தடை செய்யும் யோசனையை நாஜி கொள்கையுடன் ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில் அனைத்து ரஷ்ய குடிமக்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் ருஸ்ஸோபோபிக் யோசனை தீவிரமாக ஊக்குவிக்கப்படும்போது நாஜி கொள்கையின் மற்றொரு தெளிவான வெளிப்பாடாக நாம் இதை பார்க்கலாம் என செஞ்சு கூறியுள்ளார். மேலும் சர்வதேச சமூகத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் நியூரம் பெர்க் தீர்ப்பாயத்தின் அரசியல் கண்டுபிடிப்புகள் தனிப்பட்ட நாடுகளால் அவற்றிலும் குறிப்பாக பால்டிக் நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு திருத்தப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.