ரஷ்யாவின் சில பகுதிகளை கூகுள் மேப் ப்ளர் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழை பொழிந்ததில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனில் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் இந்தசேவை ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்படவில்லை.
இந்நிலையில் ரஷ்யாவில் கனரக ஆயுதங்கள் நிறைந்து இருப்பதால் ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் ‘ப்ளர்’ செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்பட்ட ஓர் புகைப்படமும் இந்த தகவலுடன் பரவி வந்தது. இதனையடுத்து கூகுள் மேப் இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கிறது. அதில் ரஷ்யாவின் எந்த பகுதியையும் கூகுள் மேப் மறைக்கவோ அல்லது ப்ளர் செய்யவோ இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.