Categories
உலக செய்திகள்

ரஷ்ய எண்ணெய் கிணறுகளில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்…!! கொழுந்து விட்டு எரியும் தீயால் பரபரப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வான் பரப்புக்குள் உக்ரைன் ராணுவம் புகுந்து எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் என்னை கிணற்றின் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிணறு கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் என்னை கிடங்குகளில் பற்றி எரியும் தீயை அணைக்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் . இந்த நகரம் உக்ரைன் ரஷ்ய எல்லை பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |