Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிர விவாதம்…? உக்ரைன் உளவு பாதுகாப்புத்துறை தலைவர் தகவல்…!!!!!

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி தீவிர விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிரமாக விவாதம் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் முடிவதற்கு உள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.

மேலும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது பற்றி ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் கெர்சனை மீண்டும் கைப்பற்றும் இலங்கை உக்ரைன் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 2014இல் ரஷ்யாவில் கைப்பற்றப்பட்ட கிருமியாவை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என புடானோவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |