அமெரிக்க மின்சார வாகனம் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனருமாகவும் எலோன் மஸ்க் இருக்கிறார். இவர் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச்சேவையை செயல்படுத்துதல் மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இணைப்பைக் கொண்டுவர உதவும் உபகரணங்களை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் எலோன் மஸ்க் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சவால் ஒன்று விடுத்துள்ளார். இது தொடர்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ரஷ்ய மொழியில் “இதன் வாயிலாக நான் விளாடிமிர் புதினுக்கு ஒரு ஒற்றைப் போருக்கு சவால் விடுகிறேன். இந்த சண்டையை ஏற்றுக்கொள்கிறாரா” என்று டுவிட் செய்து உள்ளார். ஆனால் டுவீட் தொடர்பாக ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரையிலும் எந்த பதிலும் வரவில்லை.