உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களுடன் இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் மிக தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக போரிஸ் ஜான்சன் உலகத் தலைவர்களுடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.