ரஷ்யா தொடர்பாக வெறுப்பு பதிவுகளை வெளியிட பேஸ்புக் நிறுவனம் அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா அதிபரான புதின், அந்நாட்டு ராணுவம் வீரர்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்பான பதிவுகளை வெளியிட பேஸ்புக் நிறுவனமானது அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இதுபோன்ற எவ்விதமான பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறி அவற்றை அவ்வப்போது பேஸ்புக் நிறுவனம் அகற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதின், ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற நாட்டு தலைவர்களுக்கு எதிரான பதிவுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கலாம் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. இது குறித்த பேஸ்புக் பதிவுகளை தணிக்கை குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.