உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று ரஷ்யா மீது உக்ரைனை நடத்தி வரும் தாக்குதலின் 100 வது நாள் ஆகும். இந்த தொடர் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் 20% பகுதி ரஷிய அரசின் வசம் சென்று விட்டதாக உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இதில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்க்கிவ் போன்ற பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவிடம் சென்றுவிட்டது.
மேலும் மரியுபோல் நகரை முழுமையாக ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்து விட்டன. ரஷ்ய ராணுவத்தினர் சுமார் 15 பேர் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு பொதுமக்கள் உட்பட பல ஆயிரம் பேரை ரஷ்ய ராணுவம் கொன்று குவித்துள்ளது. மரியுபோல் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சடலங்களின் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதல் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்கள் நாட்டின் 20 சதவீத பகுதிகள் ரஷ்யாவிடம் சென்றுவிட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதல் தற்போது முடிவுக்கு வருவதுபோல் தெரியாத காரணத்தினால் பல உலக நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.