Categories
தேசிய செய்திகள்

ரஷ்யா, உக்ரைன்போர் பதற்றம்: இனி இதுக்கெல்லாம் விலை உயர்வு…? மக்களே ஷாக் நியூஸ்…!!!!

ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா,உக்ரைன் இடையே நடைபெறும் போர் பதற்றம்  காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகத்தில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ரஷ்யா   அமைந்துள்ளது. போர் பதற்றத்தால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 100 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வால் பணவீக்கம் மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலகளவில் ரஷ்யா கோதுமை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது.உக்ரைனும் மிகப்பெரிய அளவில் கோதுமையை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பதற்றத்தால் கோதுமை விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மொபைல் போன் உள்ளிட்ட பல பொருட்களின்  உற்பத்திற்கு பல்லேடியம் தேவைப்படுகிறது. பல்லேடியம் உற்பத்தியில் உலகளவில் ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது.

இதன் விளைவாக மொபைல் போன் விலை உயரலாம். தங்கத்தின் விலை இயல்பாகவே உயரும் இதற்கிடையில் ரஷ்யாவின் பதற்றம் அதிகரிப்பதன் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |