Categories
உலக செய்திகள்

ரஷ்யா இனி இதைத் தொடராது…”இது கசப்பான உண்மை”…. ஜெர்மன் அமைச்சர் கருத்து…!!!!!!

ரஷ்யா மீண்டும் எரிவாயு வழங்குவதை தொடராது அது கசப்பான உண்மை என ஜெர்மன் பொருளாதரத்துறை அமைச்சரான ராபர்ட் ஹபேக் கூறியுள்ளார். அதாவது ரஷ்ய எரிவாயு வழங்கல் ஜாம்பவானான Gazprom நிறுவனம் ஐரோப்பாவிற்கு Nord stream 1 திட்டத்தின் மூலமாக குழாய் வழியாக எரிவாய் வழங்கும் திட்டத்தை இந்த மாதத்தின் கடைசி மூன்று நாட்களுக்கு நிறுத்த இருப்பதாக கூறியுள்ளது. இந்த சூழலில் இப்படி எரிவாயு வளங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம் மீண்டும் எரிவாயு வழங்களை தொடராது என ராபர்ட் ஹவேக் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யா ஜெர்மனிக்கு வழங்கி வந்த எரிவாயுவின் அளவை 20% ஆக குறைத்துவிட்டது. அதனால் குளிர் காலத்தில் மக்கள் பெரும் அவதியுர நேரிடலாம் என்ற அச்சம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |