Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவோம்….!! பிரபல நாடு பரபரப்பு பேட்டி…!!!

ரஷ்ய ஆக்கிரமிப்புகளை தடுக்க அணுஆயுதங்களை நிலைநிறுத்த உள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 39 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான Odesa மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன. என்னதான் இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் மறுபுறம் ரஷ்ய அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்காவின் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த உள்ளதாக போலந்து துணை பிரதமர் Jaroslaw Kaczynski தெரிவித்துள்ளார்.

Categories

Tech |