Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவை சுற்றி செல்லும் விமானங்கள்…. அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி கணக்கீடு…!!!!

உக்ரைன்  போரை அடுத்து மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடியாக ரஷ்யா தனது வான் பரப்பு வழியை செல்ல ஐரோப்பிய நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்றவற்றின் விமானங்களுக்கும் தடை விதித்திருக்கிறது. இதனால் லண்டன், ஹெல்சிங்கி, ப்ராங்க்பர்ட்  நகரங்களில் இருந்து டோக்கியோ, சியால் நகரங்களுக்கு விமானங்கள் ரஷ்யாவை சுற்றி செல்கிறது.

டோக்கியோவிலிருந்து ரஷ்யா   வழியே லண்டனுக்கு செல்வதைவிட வட பசுபிக், அலாஸ்கா, கனடா தீவு, கிரீன்லாந்து வழியாக செல்ல கூடுதலாக இரண்டரை மணி நேரம் ஆகிறது. சுற்றுப் பாதையில் செல்வதால் கூடுதலாக 21 ஆயிரம் லிட்டர் எரிபொருள் செலவாகிறது. இதனால் இந்த எரிபொருள் செலவு 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் கூடுதலாக கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும் அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர்.

Categories

Tech |