ரஷ்ய நாட்டில் தெற்கு தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ரஷ்ய நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கில் 88 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.