ரஷ்யாவின் போரானது உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது என நோட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் நோட்டா உக்ரைனுக்கு நேரடியாக எந்த உதவிகளையும் வழங்காமல் வெறுமனே ரஷ்யாவிற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு அப்பால் பரவக் கூடாது என நோட்டா அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது போர் தீவிரமடைந்து உக்ரைனுக்கு அப்பால் வராமல் இருப்பது உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அது இன்னும் ஆபத்தானதாகவும் ,அழிவுகரமானதாகவும் இன்னும் கொடியதாகவும் இருக்கும். மேலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்லக் கூடும் என்றால் அதே சமயம் நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாகவும் ரஷ்யாவின் தவறான கணக்கீடுகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தவும் நோட்டா கூட்டணியின் கிழக்கு பகுதியில் படைகளின் இருப்பு குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்தப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.