உக்ரைன் மீதான ரஷ்யாவின் அட்டூழியங்களை கடுமையாக கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் முழுவதும் மக்கள் மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய அந்நாட்டின் அதிபருடன் உரையாற்றினேன். ரஷ்ய ஆயுதப் படைகளால் செய்யப்பட்ட குற்றங்களை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது.
புச்சா மற்றும் பிற நகரங்களில் நடந்த அட்டூழியங்கள் ஐரோப்பிய மண்ணின் கருப்பு பட்டியலில் பொறிக்கப்படும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இந்த தாக்குதல் ரஷ்யாவின் கொடூர முகத்தை அப்பட்டமாக்குகிறது. இந்த கொடுமைகள் அனைத்திற்கும் ரஷ்ய அதிகாரிகள் தான் முழுப் பொறுப்பு. ரஷ்யாவின் இந்த மனிதாபிமானமற்ற செயல் சர்வதேச போர் குற்றமாகும். இந்த இருண்ட காலத்தில் உக்ரைன் மற்றும் அந்நாட்டின் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.