Categories
உலக செய்திகள்

“ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல்” செய்யிங்க…. அதிரடி கொடுத்த உக்ரேன்…. 9 ஆவது நாளாக நீடிக்கும் போர்….!!

ரஷ்யா உக்ரேனின் மீது 9 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 9 ஆவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க தற்போது வரை 8.74 லட்சம் உக்ரேனிய மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த அதிபயங்கர தாக்குதலை முன்னிட்டு உக்ரைன் நாடாளுமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது உக்ரேனிலுள்ள ரஷியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.

Categories

Tech |