உக்ரைனில் வடகிழக்கு நகரமான lzium பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் புதைக்கப்பட்ட இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலான்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் ரஷ்ய துருப்புகளின் பிடியிலிருந்து உக்ரைன் மீட்டுள்ள இன்னொரு நகரம் lzium. ரஷ்யா மீது இன்னும் கடினமான தடைகளை விதிக்க தவறினால் அது பேரழிவிற்கு இட்டுச் செல்லும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் ஜனாதிபதி ஜெலான்ஸ்கி குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை பதில் அளிக்கவில்லை. இது மட்டுமன்றி என்று அப்பாவி பொதுமக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதல்களை ரஷ்யா இதுவரை மறுத்தே வந்துள்ளது. ரஷ்ய துருப்புகளின் கொடூரம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறிய ஜெலென்ஸ்கி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்டுள்ளனர் எனவும் மிகவும் சிறிய நகரமான lzium தொடர்பில் நாம் பேசுகின்றோம் என அவர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீதான தடைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜெலன்ஸ்கி இது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அந்த நாட்டுக்கு நெருக்கடி அழிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். பல மாதங்களாக நீடித்துவரும் ரஷ்ய படையெடுப்பை அடுத்து உக்ரைனிய அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் lzium பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒரு கல்லறைக்கு அடுத்ததாக ஒரு பெரிய புதைக்குழியைக் கண்டுபிடித்தனர். அத்துடன் அவர்கள் இறந்த காரணமான சூழ்நிலைகள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் முடிய குறித்த குழியிலிருந்து 436 சடலங்களை மீட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் கொடூரமான சாவை எதிர்கொண்டுள்ளனர் எனவும் 30 பேர்கள் கடும் சித்திரவதைக்கு பின்னர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். இது மட்டுமின்றி 17 உக்ரைன் ராணுவ வீரர்களின் சடலங்களும் தொடர்புடைய குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.