Categories
தேசிய செய்திகள்

ரவுடி பேபி பாடல்…. அசத்தலாக நடனமாடிய ஜோடி…. இணையத்தில் வீடியோ வைரல்…!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ள நிலையில் நாள்தோறும் இணையதளத்தில் பலவிதமான செய்திகள் பலரால் பகிரப்படுகிறது. அதில் உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவைகளும் பகிரப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவை சேர்ந்த சௌரவ் மற்றும் அனோஷா என்று நடன ஜோடி தங்களுடைய இணையதள பக்கத்தில் தினந்தோறும் விதவிதமான பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிடுவார்கள்.

https://www.instagram.com/reel/CfRK95FFOb7/?utm_source=ig_embed&ig_rid=75619f14-06d3-4cd2-808a-ab596687db6d

இந்நிலையில் அனோஷா மற்றும் சௌரப் 2 பேரும் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலுக்கு உண்மையான தனுஷ் மற்றும் சாய் பல்லவி போன்றே அசத்தலாக நடனம் ஆடி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இவர்களை 4.92 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்கின்றனர். மேலும் சௌரப் மற்றும் அனோஷா நடனத்தை பார்த்த பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |