இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் உட்பட 2 பேருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் அருகே இருக்கும் அம்சி வேட்ட மங்கலத்தைச் சேர்ந்த அஜிதா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் சென்ற 2005 ஆம் வருடம் செப்டம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்ஸன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசிரியர் பணிக்காக மூன்று லட்சம் தேவைப்பட்டது. இதனால் அதற்காக கூடுதலாக வரதட்சனை கேட்டு கணவரும் அவரின் தம்பியும் கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த அஜிதா சென்ற 2012 ஆம் வருடம் செப்டம்பர் 20ஆம் தேதி தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அஜிதாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்கள். வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறி உள்ளதாவது, தற்கொலைக்கு தூண்டியதற்காக பத்து வருடம் சிறை தண்டனையும் 5000 அபராதமும் வரதட்சனை கொடுமைக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும் 5000 வராதமும் வரதட்சனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு வருடம் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.