சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்னே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்தனர்.பின் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி காவல்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.