கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முக்கிய வழித்தடங்களில் ஒரு சில ரயில்கள்அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இவை தடை செய்யப்பட்டிருந்தது. முன்னதாக புதுச்சேரி- திருப்பதி வழித்தடத்தில் ஊரடங்கிற்கு முன் டீசல் வண்டியாக ரயில் சேவை வழங்கப்பட்டிருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரி- திருப்பதி வழித்தடத்தில் ரயில் சேவை மின்மயமாக்கப்பட்ட விரைவாக இயங்கி வருகிறது. இதனால் குறைந்த பட்ச கட்டணம் அதிகமாக இருக்கிறது. மேலும் குறைந்த வருவாய் கிடைக்கும் சிறிய ரயில் நிறுத்தங்களில் நிறுத்தப்படுவது இல்லை இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.புதுச்சேரி – திருப்பதி ரயிலில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி வரையில், 25 ரூபாய் கட்டணத்தில், எளிதாக சென்று வந்தோம்.
விரைவு ரயில் சேவை என்ற பெயரில், ரயில் கட்டணம் இரட்டிப்பாக வசூலிப்பது வேதனை அளிக்கிறது என்று பயணிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரி மின் விரைவு ரயிலாக மாறிய பின், அதற்குரிய மிக குறைந்த கட்டணமாக, 30 ரூபாய் ஆக உள்ளது. இதனால் சில ரயில் நிறுத்தங்களில் நிறுத்துவதை தவிர்த்து, விரைவாக செல்வதற்கு வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இது, விரைவாக செல்லும் ரயில் பயணியருக்கு சவுகரியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.