Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இப்படி ஒரு ரூல் இருக்கு உங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அப்டேட்…!!!!!!

ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும்  ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு தடவையும் நீங்கள் ரயிலில் புக்கிங் செய்யும் போதெல்லாம் உங்களுக்கு விரும்பிய சீட் கிடைக்காது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது. அதனால் ரயில் பயணம் செய்வதற்கு முன்பாக அந்த விதிமுறைகளை நீங்கள் தெரிந்து கொண்டு பயணம் செய்வது நல்லது. ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் கிடைத்தால் கஷ்டம் தான். ஏனென்றால் அதில் அமர்வதும், தூங்குவதும் மேலே ஏறுவதும் கொஞ்சம் சிரமமாக இருக்கும். கீழ்பெர்தில் இருக்கும் பயணிகள் தூங்கினால் தான் மிடில் பெர்த்தை ஓபன் செய்து அதில் படுக்க முடியும். அது பற்றி கேட்கும் போது சில சமயம் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இது போன்ற நிலையில் மிடில் பெர்த் வைத்துக்கொண்ட பயணிகள் ரயில்வேயின் விதிமுறைகள் பற்றி தெரிந்திருப்பது மிகவும் நல்லதாகும். ஏனென்றால் மிடில் பெர்த்தில் தூங்கும் பயணிகள் சில சமயங்களில் ரயில் கிளம்பியுடன் அதை திறந்து விடுவார்கள். இதனால் கீழ்பெர்த்தில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் துங்கிய பின் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் பயணத்தை  தொடங்கும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது. அதாவது ரயில்வே விதிகளின் படி மிடில் பெர்த் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடிகிறது. அதை தாண்டி அவர்கள் தூங்கினால் நீங்கள் அதை தடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் ரயில்வே விதிமுறை. அதேபோல் காலை 6 மணிக்கு பின் மற்ற  பயணிகள் கீழ்பெர்த்தில்  அமரக்கூடிய விதமாக மிடில் பெர்த்தை மடக்க   வேண்டும்.

Categories

Tech |