இனி வரும் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏனென்றால் வெகுதூர பயணங்களுக்கு ரயிலில் தான் சுலபமாக இருக்கிறது இந்த நிலையில் இனி வரும் காலகட்டத்தில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர இருக்கின்றது. அதனால் பல விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ரயில் பயணங்களை மக்கள் விரும்புகின்றனர் அதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கின்றது.
இதனால் அமர வசதி இல்லாமல் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றார்கள். அந்த வகையில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும் அடுத்து வரும் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாகவும் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில்கள் தர்பங்கா,சஹர்சா, பாகல்பூர், முசா பர்பூர், பீரஸ்பூர் பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் போன்ற ரயில் பாதைகள் வழியாக நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை நீக்கி இருப்பதாக தற்போது இந்திய ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.