தாம்பரம் பணிமனையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனையடுத்து சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே 15 மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தாம்பரம் பணிமனையில் நாளை காலை 9.55 முதல் மதியம் 1.55 வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.02 மணி, 9.30, 10.12, 10.56, 11.50, 12.20 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு 9.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் செங்கல்பட்டு-கடற்கரைக்கு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம்-கடற்கரைக்கு 9.15 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு 10.30 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டு-கடற்கரைக்கு 11 மணி, 1.30, 12.20, 1 மணிக்கு இயக்கப்படும் ரெயில்கள், திருமால்பூர்-கடற்கரைக்கு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதைதொடர்ந்து சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 9.02 மணி, 10.56, செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி, 10.12, 11.50, 12.20 மணிக்கும், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.சென்னை கடற்கரை-அரக்கோணம் பகல் 12.40 மணி, செங்கல்பட்டு-கடற்கரை 9.30, 10.30 காஞ்சீபுரம்-கடற்கரைக்கு செல்லும் ரெயில் செங்கல்பட்டில் இருந்து 9.15 மணிக்கு புறப்படும்.
தாம்பரம்-கடற்கரைக்கு காலை 11.50 மணி, மதியம் 1.50 மணி, செங்கல்பட்டு-கடற்கரைக்கு 11.30, 12.20 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரைக்கு காலை 10.45 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. காரைக்குடி, சென்னை, எழும்பூர் காலை 5.05 மணி ரெயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.சென்னை எழும்பூர்-மதுரைக்கு 1.40 மணிக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.