Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே…. 14, 18, 21 ஆகிய தேதிகளில்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல்-லக்னோ  இடையில் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரல் – லக்னோ இடையில் 16093 எண் கொண்ட ரயில் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது வரும் 14, 18, 21 ஆகிய தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு கான்பூர் வழியாக லக்னோவிற்கு விரைவு ரயில் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மறு மார்க்கமாக லக்னோ – சென்னை சென்ட்ரல் இடையில் வாரம் இருமுறை இயக்கப்படும் 16094 என்ற எண் கொண்ட விரைவு ரயில் வரும் 13, 16, 20 ஆகிய தேதி முதல் கான்பூர், எட்டாவா, ஜான்சி வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வழித்தட ரயில் நிலையங்களில் இறங்க முன்பதிவு செய்யும் பயணிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

Categories

Tech |