ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் திருப்பதி-பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மேலே குறிப்பிட்டுள்ள அதே தேதிகளில் விக்ரவாண்டி மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் கடலூர் மற்றும் விழுப்புரம் இடைய ரத்து செய்யப்படுகிறது. மேலும் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே மதியம் 2.5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் கடலூர் மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள.