தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் செல்லும் பாரத் கெளரவ் ரயில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை வாரணாசியில் இருந்து புறப்பட்டு ரயில் சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு வருகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்,திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் ரயில் திங்கட்கிழமை மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் செல்கிறது. பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக ஹைதராபாத் செல்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.