Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. டிக்கெட் கன்ஃபார்ம் செய்ய… வெளியான புதிய செயலி…!!!!

தீபாவளி பண்டிகை வருவதால் வெளியூர்களில் தங்கி இருக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனால் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வேயில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் மேலும் இந்த காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட்களை உறுதிப்படுத்துவதற்காக குயிக் தட்கல் என்னும் புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக விரைவாக டிக்கெட்களை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் பயணிகளுக்கு ஏற்ப இந்திய ரயில்வே 179 சிறப்பு ரயில்களை தொடங்கி இருக்கிறது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்களை வாங்குவது பற்றி தெரிந்து கொள்வோம்.

1. செயலியில் உங்கள் முன்பதிவு விவரங்களை முன் நிரம்ப வேண்டும் தட்கல் ரயில் முன்பதிவு தொடங்கியவுடன் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தானாகவே நிரப்பப்பட்டு விடும்

2. ரயில் கனெக்ட் செயலியானது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்கும்.

3. தட்கல் மற்றும் பொது ரயில் டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கிறது.

4. ஒரே நேரத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு மட்டுமே அனுமதிக்கப்படும் ஐபி முகவரியை மறைக்க முடியாது மற்றும் விபிஎன் பயன்படுத்த முடியாது.

5. பிஎன்ஆர் சரிபார்ப்பு சரிபார்ப்புகள் ரயிலில் உணவு ஆர்டர்கள் மற்றும் ரயில் ரயில் ஸ்டேட்டஸ் ஐ காண்பது போன்றவற்றை இதில் செய்து கொள்ளலாம்.

இது பற்றி அஃப்ரே ஸ்டூடியோஸின் நிறுவனர் விஷால் அப்ரே பேசும்போது, நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக மென்பொருட்கள் மற்றும் செயலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் பிரபலமான ஒன்றுதான் எங்களின் quick tatkal செயலி இந்த செயலியின் மூலமாக தட்கல் மற்றும் பொது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து செயல்முறையை எளிதாக்குவது தான் தங்களை முக்கிய நோக்கமாகும். ரயிலோபி உடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். இதன் மூலமாக மக்களுக்கு சிறந்த வசதிகளை செய்து தருவோம் மேலும் எதிர்காலத்தில் ஈமெயில் மார்க்கெட்டிங்கில் மேம்பாடு செய்வதில் கவனம் செலுத்த போகின்றோம் தற்போது இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |