நவராத்திரி பண்டிகையின் போது விரதம் இருக்கும் ரயில் பயணிகளுக்காக தனி உணவு வகைகளை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நவராத்திரி பண்டிகை ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. பண்டிகை தொடங்கி ஒன்பது நாட்களுக்கு மேல் துர்க்கையை வழிபட்டு பக்தர்கள் விரதம் இருப்பார்கள். இந்த விரத சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் உணவு முறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் ரயிலில் பயணிப்போர் அதற்கு ஏற்ற உணவு சாப்பிட இயலாது.
இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது விரதமிருக்கும் ரயில் பயணிகளுக்காக தனி வகை உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐஆர்சிடிசி நிறுவனம் இந்த சேவை ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மார்ச் 20ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ரயில் பயணிகள் தங்களுக்கான சிறப்பு நவராத்திரி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இந்த நவராத்திரி விரத ஸ்பெஷல் உணவு ஒரு தாலி மீல்ஸ். இதில் வெங்காயமும், பூண்டும் இருக்காது. சாதாரண உப்புக்கு பதிலாக ராக் சால்ட் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த தாலியில் லஸ்ஸி, பழச்சாறு, கோதுமை பக்கோடா, காய்கறிகள், பூரி, பழங்கள், டீ, பாலில் செய்த ஸ்வீட்ஸ், உலர் பழ கீர் ஆகியவை வழங்கப்படும்.
இந்த தாலி மீல்ஸுக்கு 125 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வசூலிக்கிறது ஐஆர்சிடிசி. உந்த விரத உணவுகள் ராஜ்தானி, ஷதாப்தி உள்ளிட்ட 500 ரயில்களில் வழங்கப்படும் எனவும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.