நாட்டில் பெரும்பாலான நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக்கிய விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அதன்படி அண்மையில் ரயில்களில் கூடுதல் இலக்கியத்தை எடுத்துச் செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது. அதனால் ரயில் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ரயில்களில் லக்கேஜ் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே அமைச்சகம் கடந்த மே 29-ஆம் தேதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரயில் பயணிகள் கூடுதல் லக்கேஜ் இருந்தால் பார்சல் அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் ரயில்களில் லக்கேஜ் விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விதிமுறைகள்:
ரயில்களில் பயணிகள் அவரவர் வகுப்புக்கு ஏற்ப 40 கிலோ முதல் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்ல முடியும்.
ஸ்லீப்பர் வகுப்பில் (Sleeper class) 40 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம்.
ஏசி வகுப்பில் 50 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம்.
முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம்.