ரயில் பயணிகளுக்காக தற்போது ஒரு முக்கிய செய்தி வந்திருக்கின்றது. அதாவது உங்களிடம் முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் இருந்து சில முக்கியமான வேலை காரணங்களாக உங்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு யாருக்காவது மாற்றம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் தேவைப்படுபவர்களுக்கு இந்த டிக்கெட்டை நீங்கள் கொடுத்துவிடலாம் அதற்கான வசதி இருக்கின்றது.
இந்தியாவில் பெரும்பாலானோரின் முதன்மை தேர்வாக ரயில்கள் இருக்கின்றன. மேலும் பேருந்து விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்பி வருகின்றனர். ரயிலில் பயணிப்பது பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மிக விரைவாகவும் செல்லலாம் டிக்கெட் கட்டணமும் குறைவு. ஆனால் சிலருக்கு ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்தபின் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் அந்த பணமும் கிடைக்காமல் போகலாம். வேறு ஒருவருக்கு டிக்கெட் போட்டாலும் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். அதனால்தான் ரயில் பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கான டிக்கெட் மாற்றும் வசதி நீண்டகாலங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆனால் மக்களுக்கு இது பற்றி தெரியவில்லை. மேலும் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு பதிலாக உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த டிக்கெட்டை மாற்றம் செய்துகொள்ளலாம். ஒரு பயணி தனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகள், கணவன் மற்றும் மனைவி என அவரது குடும்பத்தில் உள்ள வேறு யாருடனாவது பெயரிலும் மாற்றம் செய்துகொள்ளலாம். அதன்பிறகு பயணச் சீட்டில் பயணிகளின் பெயர் நீக்கப்பட்டு யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயர் சேர்க்கப்படுகிறது. ரயில் பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது பணிக்காக சொல்கின்றார் என்றால் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக அவர் கோரிக்கை வைத்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த டிக்கெட் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படும் திருமணத்திற்கு செல்பவர்களாக இருந்தால் 48 மணி நேரத்திற்கு முன் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த வசதியை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ரயில் டிக்கெட்டுகளை மாற்றும் வசதி ஒருமுறை மட்டுமே கிடைக்கும். அதாவது ஒரு பயணி தனது பயணத்தை வேறு ஒருவருக்கு ஒரு முறை மாற்றி இருந்தால் அதனை மீண்டும் மாற்றம் செய்ய இயலாது. முறைகேடுகளை தவிர்ப்பதற்கு இந்த வசதி தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்கவும் இந்த கட்டுப்பாட்டு ரயில்வே நிர்வாகம் விதித்திருக்கிறது.