இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயணிகளின் வசதியை கருதி இந்திய ரயில்வே பல்வேறு விதிமுறைகளை அமல் படுத்தியுள்ளது. அதன்படி இந்த விதிமுறை மிகவும் முக்கியமானது. ரயில் பயணிகள் பெரும்பாலும் மூன்றாவது ஏசி அல்லது ஸ்லீப்பர் கோச் மற்றும் நடுத்தர பெர்த்தில்தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகின்றது.
கீழ் பெர்த்தில் இருப்பவர் இரவு வெகு நேரம் வரை இருக்கையில் அமர்ந்திருப்பார். அதன் காரணமாக நடுத்தரத்தில் இருப்பவர் விரும்பினாலும் ஓய்வு எடுக்க முடியாது. பல நேரங்களில் நடுத்தரத்தில் பயணிகள் இரவில் வெகு நேரம் வரை கீழ் பெர்த்தில் உட்காருவது தூங்க முடியாமல் சிரமப்படுவது நடக்கின்றது. அப்படி இந்த பிரச்சனை இருந்தால் ரயில்வேயின் விதிமுறைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ரயில்வே விதிமுறைகளின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடு பெர்த்தை திறக்கலாம்.
அதாவது உங்களிடம் கீழ் பெர்த் இருந்தால் இரவு 10 மணிக்கு பிறகு நடுத்தர மற்றும் மேல் பெர்த் பயணிகள் உங்கள் இருக்கையில் அமர முடியாது.இந்த விதிமுறைகளை கூறி உங்கள் இருக்கையில் யாராவது இருந்தால் அவர்களை நீங்கள் காலி செய்ய சொல்லலாம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரயில் பயணிகள் நிம்மதியாக தூங்குவதற்கு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இன்னும் சொல்லப்போனால் இரவு 10 மணிக்கு பிறகு டிக்கெட் பரிசோதவர் கூட உங்களை எழுப்பி தொந்தரவு செய்ய முடியாது என ரயில்வே விதிமுறை கூறுகிறது.