தமிழகத்தில் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைத்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு,புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
நாளைய தினம் விடுமுறை முடிவடைந்து மீண்டும் சென்னை, கோவை மற்றும் சேலம் என பல்வேறு ஊர்களுக்கு திரும்ப வசதியாக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 21ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்றும், சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.