Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பரான வசதி…. இது டிக்கெட் கேன்சல் செய்தால் உடனடியாக பணம் கிடைக்கும்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது டிக்கெட் புக்கிங் தொடர்பான முக்கியமான விதிமுறை பயணிகளுக்கு வெளியாகி உள்ளது. பலரும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து விட்டு சில காரணங்களுக்காக அதனை கேன்சல் செய்து விடுவார்கள். முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்ட் தொகை கிடைக்கும். ஆனால் கடைசி சமயத்தில் கேன்சல் செய்தால் சில நேரங்களில் ரீபண்ட் தொகை உங்களின் கைக்கு வந்து சேராது. அதனால் பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் விட்டு விடுவார்கள்.

ரயில் பயணத்திற்கான சார்ட் தயாரித்த பிறகு கூட ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் ரீபண்ட் கிடைக்கும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரீபண்ட் தொகை காண டிக்கெட் டெபாசிட் ரசிது சமர்ப்பித்தால் போதும். இதற்கு முதலில் IRCTC இணையதளத்தில் செல்ல வேண்டும். www.irctc.co.in பக்கத்திற்குச் சென்று my account என்ற வசதியில் my transaction என்ற ஆப்ஷனை கிளிக் செய்து TDR சமர்ப்பிக்கும் வசதியை கிளிக் செய்து ரயில் டிக்கெட் புக்கிங் செய்த நம்பரின் விவரங்கள், PNR நம்பர் மற்றும் கேப்சா குறியீடு ஆகியவற்றை பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு எவ்வளவு ரீபண்ட் கிடைக்கும் போன்ற விவரங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க முடியும். அதற்கான உறுதிப்படுத்தும் தகவல் எஸ்எம்எஸ் மூலமாக உங்களுக்கு வந்து சேரும்.

Categories

Tech |