Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வாட்ஸ் அப் இருந்தா மட்டும் போதும்…. வந்தாச்சு புதிய வசதி…..!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் ரயிலில் மற்ற போக்குவரத்து களுடன் ஒப்பிடுகையில் கட்டணமும் குறைவு தான் அது மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். இதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.குறிப்பாக நீண்ட வரிசையில் இன்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஃபோன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் தற்போது உள்ளது.

இந்நிலையில் ரயில்வே பயணிகள் தங்களது தேவையான pnr ஸ்டேட்டஸ், இரயில் இருக்கும் இடம்,நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் whatsapp மூலமாக பார்த்துக் கொள்ளும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது மும்பையை சேர்ந்த railofy என்ற நிறுவனம்.இதுவரை இத்தகைய தகவல்களுக்காக பயணிகள் பல்வேறு செயலை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கொண்டு வந்துள்ள இந்த முன்னெடுப்பு மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Categories

Tech |