உங்களின் பயணத்தின் போது அடிக்கடி ரயில் தாமதத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள். அதேபோல இனி வரும் காலங்களில் ரயில் தாமதமானால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் இந்த பயணத்தின் போது ரயில் தாமதமானால் ஐ ஆர் சி டி இல் இருந்து சில வசதிகளை பெற உங்களுக்கு உரிமை இருக்கிறது. இதைப் பற்றிய பயனுள்ள தகவல்களை இங்கே காண்போம். அத்தகைய உரிமையை பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இனி உங்கள் ரயில் தாமதமானால் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது. அதன்படி உங்கள் ரயில் தாமதமாக வந்தால் ஐஆர்சிடிசி உங்களுக்கு உணவு மற்றும் குறைபாடுகளை வழங்கும் இந்த உணவு உங்களுக்கு ஐ ஆர் சி டி சி யால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில் இலவச உணவு மற்றும் குளிர் பாணங்களை பெற நீங்கள் தயங்க வேண்டியதில்லை. அதனால் ஐஆர்சிடிசி உங்களுக்கு வழங்கிய உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் இந்திய ரயில்வேயின் விதிகளின்படி ரயில் தாமதமாக வரும் போது ஐ ஆர் சி டி சி யின் கேட்டரிங் கொள்கையின்படி பயணிகளுக்கு காலை உணவும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் விதிகளின்படி ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இலவச வசதிகள் வழங்கப்படும். மேலும் பயணிகளுக்கு முப்பது நிமிடம் தாமதமாக வந்தால் உணவு வசதி கிடைக்காது. இந்நிலையில் கேட்டரிங் கொள்கையின் கீழ் ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக நேரமாக வந்தால் சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. ஐ ஆர் சி டி சி யின் கொள்கைப்படி காலை உணவில் டீ அல்லது காபி மற்றும் இரண்டு பிஸ்கட்டுகள் வழங்கப்படுகின்றது. மேலும் மாலை உணவில் தேநீர் அல்லது காபி மற்றும் நான்கு துண்டுகள் பிரட் மற்றும் பட்டர் வழங்கப்படுகிறது. ஐ ஆர் சி டி சி ஆனது பயணிகளுக்கு சாதம் ஊறுகாய் குழம்பு மற்றும் ஊறுகாய் பாக்கெட்டுகளை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு வழங்குகின்றது அல்லது ஏழு பூரிகள், உருளைக்கிழங்கு பாஜி, ஊறுகாய் பாக்கெட், உப்பு மற்றும் மிளகு தலா ஒரு பாக்கெட் போன்றவற்றையும் வழங்கப்படுகின்றது.