சென்னை, எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 13ஆம் தேதி புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் பெட்டியில் பயணிகள் மாற்று திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் இதன் வீடியோ பரவியது. இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் உடனடியாக விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயணிகள் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறிய போது, இந்த சம்பவம் குறித்து தீவிரமான பரிசீலனை செய்யப்பட்டு ரயில் கார்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் தலைமை வணிக ஆய்வாளர் மற்றும் நிலைய அதிகாரிகள், இயக்க துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ரயில்களில் எஸ்எல்ஆர்டி பெட்டிகளை உடனடியாக திறக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலின்படி கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததுபோல விரைவு ரயில்கள் முன்பதிவில்லாத பெட்டிகள் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் மெயில் விரைவு ரயில் 120க்கும் மேற்பட்ட எஸ்எல்ஆர்டி இணைக்கப்பட்டிருக்கிறது. எஸ்எல்ஆர்டி பெட்டி என்பது உடைமைகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிடம் கொண்ட பெட்டியாகும். மாற்று திறனாளிகள் இந்தப் பெட்டிகளில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பயணிக்க செல்லுபடியாகும் சலுகைகளுக்கு ஈடாக முன்பதிவு செய்யாத பயணிகள் வழங்கப்படுகின்றன என கூறியுள்ளார்.