தெலங்கானா மாநிலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து நேரிட்டது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் திடீர் தீ விபத்து நேரிட்டது. இதையடுத்து புகை வெளியேறியது. தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
ரயிலில் முதல் பெட்டியில் ஏற்பட்ட தீ மளமளவென்று பரவியது. இரண்டு பெட்டிகள் தீயில் சேதமடைந்தன. சம்பவத்தின்போது பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.