பஞ்சாப் மாநிலம் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்டநேரமாக கேட்பாறின்றி ஒரு சூட்கேஸ் இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று அந்த சூட்கேஸை கைப்பற்றிய காவல்துறையினர், பின் அதை திறந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டதில், ஒருவர் சூட்கேஸை விட்டுச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அத்துடன் அடையாளம் தெரியாத சடலம் பற்றியும், சூட்கேஸை அங்கு வைத்துவிட்டுச் சென்ற நபர் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜாலந்தர் முழுதும் பேருந்து நிலையங்கள், பொதுயிடங்களில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.