Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்… பெரும் பரபரப்பு… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அதில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தகராறு முற்றியதயடுத்து இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் கற்களால் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் இது பற்றி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையே மாணவர்கள் கற்களை வீசி மோதலில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |