Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை…. வெளியான பரபரப்பு வீடியோ…. பாஜக பிரமுகர் வீட்டில் மீட்பு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் தாயுடன்  தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர ரயில் நிலைய மேடையில் தாழ்வுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை அந்த வழியாக பேண்ட் சட்டை அணிந்து டிப்டாப்பாக வந்த நபர் ஒருவர் குழந்தையை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார்.

சிறிது நேரம் கழித்து தாய் எழுந்து பார்த்த போது பக்கத்தில் படுத்து இருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.குழந்தையை தூக்கிச் செல்லும் வீடியோ ரயில் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ  இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாஜக பிரமுகர் வினிதா என்பவர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணையில் குழந்தையை கடத்திய கும்பல் மருத்துவர்கள் என்ற பெயரில் சிறிய மருத்துவமனை நடத்தியது தெரியவந்தது.கடத்தப்பட்ட குழந்தை என்பது தெரியாமல் அவர்களிடம் 1. 8 லட்சம் கொடுத்து பாஜக பிரமுகரும் அவரது கணவரும் வாங்கியுள்ளனர்

Categories

Tech |