இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.அவ்வாறு ரயிலில் பயணிக்கும் பலரும் ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படலாம்.இதனிடையே ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?.. ஆம் ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது.
ஒருவேளை நீங்கள் செல்ல வேண்டிய ரயில் கால அட்டவணையை தாண்டி தாமதமாக இயங்கினால் உங்களுக்கு உணவு மற்றும் ஒரு குளிர்பானத்தை ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.ரயில்வேயில் இந்த வசதியை நீங்கள் உரிமையோடு அனுபவிக்க முடியும்.ரயில் தாமதமாகும் போது ஐ ஆர் சி டி சி கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் சாப்பாடு இலவசமாக வழங்கப்படும்.
பயணிகளுக்கு இலவச மீல்ஸ் வழங்கப்படும்.ஆனால் ரயில் முப்பது நிமிடம் தாமதமாக வந்தால் உணவு வசதி கிடையாது.கேட்டரிங் கொள்கையின்படி ரயில் இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படும். காலை உணவில் டீ அல்லது காபி மற்றும் இரண்டு பிஸ்கட்கள், மாலை சிற்றுண்டியில் டீ அல்லது காபி மற்றும் நான்கு பிரட் ஸ்லைஸ்கள் வழங்கப்படும். ஐ ஆர் சி டி சி மூலம் பயணிகளுக்கு மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு ரைஸ், பருப்பு மற்றும் ஊறுகாய் வழங்கப்படும் அல்லது ஏழு பூரிகள் வெட்ச் அல்லது ஆளுபாஜி, ஊறுகாய் பாக்கெட் கொடுக்கப்படுகிறது.