Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற நண்பர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலமான கோழிக்கோடு மாவட்டத்தில் மாணவி நபாத்(16) வசித்து வந்தார். இவர் தன் ஆண் நண்பரான இசாமுடன் அங்குள்ள பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் தங்களது செல்போனில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் நின்று போஸ் கொடுக்க முயன்றபோது அவ்வழியே வந்த மங்கலாரம் -கோயம்பத்துார் விரைவு ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதி இருக்கிறது. இந்த விபத்தில் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்ட மாணவி நபாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருடன் வந்த ஆண் நண்பர் இசாமுக்கு கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தண்டவாளப் பகுதியில் தூக்கிவீசப்பட்டுள்ளார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் இசாமை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் ஆற்றில் தூக்கி விசப்பட்டு உயிரிழந்த மாணவி நபாத்தின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு செல்பி மோகத்தால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |