நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்தது மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த நிலையில் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.
இதையடுத்து சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் தர்ஷா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தண்டவாளப் பகுதியில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரயில் ட்ராக்கில் ஒரு ரசகுல்லா என கிண்டல் அடித்து வருகின்றார்கள். தற்பொழுது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.