இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக புது அப்டேட்டுகள் வாயிலாக சேவையை மேம்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது டிக்கெட் முன் பதிவு முறையினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயானது உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகத்தின் ஆன்லைன் பயணிகள் டிக்கெட் முன் பதிவு முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு விலக்கு உள்ளிட்ட வசதியைப் பெறமுடியும். அத்துடன் உடனுக்குடன் பயணிகளின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் பயணிகள் முன் பதிவு முறை பற்றிய ரயில்வேயின் அறிக்கையை, அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டு உள்ளது. இதனிடையில் பயணச் சீட்டு வழங்கும் முறையை நவீனப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பல நேரங்களில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் பெறுவதில் ஏற்படும் சிரமங்களையும் களைவதற்கு இரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியுள்ளது. வருகிற காலங்களில் ஆன்லைன் டிக்கெட் செயல் முறையை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளது.
அடுத்த தலைமுறை இ-டிக்கெட் (NGET) முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வேயானது தெரிவித்து இருக்கிறது. கடந்த 2016-17 ஆம் வருடத்தில் நிமிடத்திற்கு 15,000 டிக்கெட்டுகளாக இருந்த முன் பதிவு, 2017-18 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 18,000 டிக்கெட்டுகளாக அதிகரித்து உள்ளது. பின் 2018-19 ஆம் வருடத்தில் 20,000 டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்திற்கு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது IRCTC இணையத்தில் நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் திறனுள்ளதாக ரயில்வேயானது தெரிவித்துள்ளது. மறு புறம் மார்ச் 5, 2020 அன்று ஒரு நிமிடத்தில் 26,458 டிக்கெட்டுகள் பதிவுசெய்யப்பட்டது இன்றளவும் சாதனையாக இருக்கிறது.