ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சிறப்பு சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது திரும்ப கிடைக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வங்கி, பேருந்து, ரயில் போன்ற பல்வேறு சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு எப்போதும் கூடுதல் சலுகைகள் உள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் ரயில் பயண சலுகை கிடைக்குமா? என்று இந்தியாவின் மூத்த குடிமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொரோனா பிரச்சினை காரணமாகவே இந்த சலுகை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 2020 மார்ச் இருபதாம் தேதி முதல் சலுகைகள் நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் புதுப்பிபதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் கொரோனா பிரச்சனைக்கு பிறகு ஏசி பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்து விட்டதாக கூறினார்.