Categories
தேசிய செய்திகள்

“ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா”?….. இது தெரியாம பண்ணாதீங்க…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ரயில் பெட்டி குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

சொந்த ஊருக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெகுதூரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானது என்பது மட்டுமல்லாமல் டிக்கெட் கட்டணமும் குறைவு, மிக வேகமாகவும் செல்லும். இதனால் நிறைய பேர் பேருந்து, விமான பயணிகளை விட ரயில்வே பயணங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். ரயிலில் பயணிக்க நினைப்பவர்கள் முன்கூட்டியே அதற்கான டிக்கெட்டை ஐஆர்சிடிசி ஆப் மூலமாக அல்லது வெப்சைட் மூலமாக முன்பதிவு செய்து கொள்கின்றனர்.

நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று சிலர் புக்கிங் செய்து கொள்கின்றனர். அதோடு இந்த ஆப் மூலமாக எந்தெந்த ரயில் ஓடுகிறது, எவ்வளவு இருக்கைகள் உள்ளது, நேரம் போன்ற பல தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் விதிமுறைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய அப்டேட் வந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் எவ்வித சிரமும் இல்லாமல் புக்கிங் செய்ய முடியும். அப்படி ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை ரயில்வே நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ரயிலில் தற்போது புதிய பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில பெட்டிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. விஸ்டடோம் கோச்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான புக்கிங் code பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதேபோல, ஏசி 3 டையர் எகமானி கோச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளுக்கான புக்கிங் code கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

V.S – Vistadome Non AC

S.L- Sleeper

C.C – AC Chaircar

3A – Third AC

3E – AC Three Tier Economy

2A – Second AC

3A – Gareeb rath AC Three Tier

CC – Gareeb rath Chaircar

1A – First AC

E.C – Executive Class

E.A – Anubhuthi Class

F.C – First Class

E.V – Vistadome AC

Categories

Tech |