இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி பயணம் செய்பவர்கள் தட்கல் முறையிலாவது டிக்கெட் முன்பதிவு செய்து எப்படியாவது ரயிலில் சென்று விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக அதில் உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. IRCTC செயலி அல்லது இணையதளம் மூலமாக பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
எனவே அதில் உள்ள விதிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வது நல்லது. ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஒரு சில சமயங்களில் பல காரணங்களால் டிக்கெட் கேன்சல் ஆகிவிடும். அதற்கான ரீபண்ட் தொகையை ஐ ஆர் சி டி சி உங்களுக்கு வழங்கும். ஆனால் அது கையில் வந்து சேர சில நாட்கள் ஆகும். ரீபண்ட் விஷயத்தில் ஐ ஆர் சி டி சி முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது ரீபண்ட் கொடுப்பதற்காக தனியாக ஒரு பேமெண்ட் கேட்டு அமைப்பை உருவாக்கியுள்ளது.
அதன் மூலமாக பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும். வாடிக்கையாளர்களுக்கு ரீபண்ட் தொகை இதன் மூலமாக விரைவில் வழங்க முடியும். இந்த புதிய வசதியால் தொகை உடனடியாக கிடைக்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெயிட்டிங் லிஸ்ட் இருந்து சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு உங்களது டிக்கெட் கேன்சல் ஆகிவிடும். அப்போது உங்களுக்கான ரீபண்ட் தொகை மிக விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது டிக்கெட் ரீபண்ட் தொகை சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களில் பயணிகளுக்கு கிடைத்து விடும். இந்த வசதியால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.